மறைந்த முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நினைவுநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி எம்.பி. அவருக்கு அஞ்சலி பதிவி வெளியிட்டிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் அரசியல் பிரமுகர்கள்,திரைப்பிரபலங்கள் போன்றோர் தங்களது அஞ்சலி குறிப்பை பதிவு செய்தனர். அந்த வ்கையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி தனது முகநூலில் அஞ்சலி குறிப்பை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “ஆண்களின் உலகம் என்று நம்பப்படுகிற அரசியலில் தனியொரு பெண்ணாக நின்று போராடி வெற்றி பெற்றவர். அவரது போராட்டம் அவரது தனிப்பட்ட போராட்டம் மட்டுமல்ல.பெண் என்றாலே எளிதாக நசுக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்த ,ஒரு பெண்ணின் கதை. அவருக்கு எனது அன்பும்,அஞ்சலியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: காவல்நிலையத்தில் கொலை முயற்சி புகார்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் சூழலில் அதிமுகவை சேர்ந்த ஜெயலலிதாவுக்கு ஜோதிமணி அஞ்சலி தெரிவித்துள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து பின்னூட்டம் இட்டனர். இந்தியாவின் பெரும் அரசியல் தலைவராக இந்திரா காந்தி விளங்கிய நிலையில், வேறொரு பெண் தலைவருக்கு அஞ்சலியா என்ற ரீதியில் சிலர் பின்னூட்டம் இட்டிருந்தனர்.
காங்கிரஸ் கட்சியை மதிக்காமல் ஜெயலலிதா செயல்பட்டதாகவும் அவருக்கு அஞ்சலி தெரிவிப்பது ஏன் என்றும் மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல், பலரும் தங்களது கண்டனங்களை பின்னூட்டத்தில் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிங்க: அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை தகர்க்கிறது பாஜக: முத்தரசன் குற்றச்சாட்டு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jayalalithaa, Jothimani