Home /News /tamil-nadu /

நெல்லை பள்ளி கட்டிட விபத்து - 4 ஆசிரியர்களுக்கு காவல்துறை சம்மன்

நெல்லை பள்ளி கட்டிட விபத்து - 4 ஆசிரியர்களுக்கு காவல்துறை சம்மன்

சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்திருந்தது.

சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்திருந்தது.

சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்திருந்தது.

    நெல்லையில் கடந்த 17ஆம் தேதி பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிந்த சம்பவத்தில், உடற்கல்வி ஆசிரியர்கள் 3 பேர் உள்பட 4 ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    நெல்லையில் பள்ளி கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்திருந்தது. இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 4 ஆசிரியர்களுக்கு நெல்லை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு
    திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில் கடந்த 17-ம்தேதி காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இதையும் படிங்க : ‘தமிழகம் வன்முறைக் களமாக மாறிவிடும்’ - நாம் தமிழர் கூட்ட விவகாரத்தில் திமுகவுக்கு அன்புமணி எச்சரிக்கை

    இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, கட்டிடம் இடிந்து விழுந்த விபத்திற்கு சுற்றுச்சுவர் அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளது தான் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார்.

    இதையும் படிங்க : திமுக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் - பொள்ளாச்சி ஜெயராமன்

    இதையடுத்து, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தமிழகம் முழுவதும், பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன், பேருந்தில் மாணவர்கள் தொங்கிச் செல்லும் நிலைக்கும் நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Nellai, School, School students, Tirunelveli

    அடுத்த செய்தி