எங்கள விட்டுறுங்க அண்ணா, ப்ளீஸ்.. கதறும் காதல் ஜோடி, அத்துமீறும் கும்பல் - அதிர்ச்சி வீடியோ

நெல்லை புறநகர் பகுதியில் தனிமையில் இருந்த காதலர்களை மிரட்டி பணம், செல்போன் பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Share this:
நெல்லை மாநகரின் புறநகர் பகுதியான ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை பகுதி ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியாகும். மாலை நேரங்களில் பைக் ரேஸ் பிரியர்கள், காதல் ஜோடிகள் அங்கு சென்று வருவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பிறகு அப்பகுதியில் செல்பவர்களை மிரட்டி வழிப்பறி செய்வது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலருடன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் அவர்கள் எல்லை மீறியதாக தெரிகிறது. இதை மறைந்திருந்து பார்த்த சிலர் அவர்கள் அருகில் சென்று இருவரையும் பிடித்து தரையில் அமர வைத்துள்ளனர்.

யார் என விபரங்களை கேட்டு வீட்டில் சொல்லிவிடுவதாக துன்புறுத்தி உள்ளனர். அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த பணம், செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்த அந்த மிரட்டல் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. நடந்ததை வெளியில் சொன்னால் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை வெளியிட்டுவிடுதாக மிரட்டியதால், காதல் ஜோடி அதை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர்.ஆனால் மிரட்டல் கும்பல், காதலர்களை மிரட்டிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இது காவல்துறை கவனத்திற்கு செல்ல, வீடியோவில் அவர்கள் சொன்ன பெயர் முகவரியை வைத்து விசாரித்தனர். காதலரின் வீட்டுக்கு சென்று அவரிடம் நடந்த சம்பவம் உண்மையா? என்பது குறித்து விசாரித்தனர்.

சம்பவம் உண்மைதான் என அவர் கூறியதும், மிரட்டல் நபர்கள் மீது புகார் ஒன்றை பெற்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காதல் ஜோடியிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, காதலர்கள் இது போன்ற ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.மேலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் செல்பவர்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபடும் கும்பல் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.

 
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading