Home /News /tamil-nadu /

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

கனமழை

கனமழை

நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதை தொடர்ந்து,நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, வங்கக்கடலில் அண்மையில் உருவான காற்றழுத்தம் கடந்த வியாழக்கிழமை கரையைக் கடந்த நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தாய்லாந்து கடற்கரைப் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் திங்கட்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

    இது மேலும் தீவிரமடைந்து, அதற்டுத்த 48 மணிநேரத்தில் ஆந்திர கடற்கரையை அடைய வாய்ப்பு உள்ளது. புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் புவியரசன் தெரிவித்தார்.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சில இடங்கலில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர், சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

    சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது. அரபிக்கடலிலிருந்து வரும் தரைக்காற்று காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்றும், பின்னர் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதுவரையான வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழகத்தில் சராசரியாக 27 சென்டிமீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் இதுவரை 42 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளதாகவும் சென்னையில் 47 சென்டிமீட்டர் பெய்யும் நிலையில், 82 சென்டிமீட்டர் கிடைத்துள்ளதாகவும் புவியரசன் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Heavy rain, Kanyakumari, Nellai, Rain Forecast, Weather News in Tamil

    அடுத்த செய்தி