ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மோடி, அமித்ஷா குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் கைது!

மோடி, அமித்ஷா குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் கைது!

நெல்லை கண்ணன்

நெல்லை கண்ணன்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ‘பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனையடுத்து, நெல்லை கண்ணன் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில், இன்று நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை அருகில் ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், பெரம்பலூர் தனியார்விடுதியில் தங்கியிருந்த நெல்லைக் கண்ணனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Also see:

 

First published:

Tags: Citizenship Amendment Act