Home /News /tamil-nadu /

நெல்லையில் அலைமோதிய பயணிகள் கூட்டம்... காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்...!

நெல்லையில் அலைமோதிய பயணிகள் கூட்டம்... காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்...!

கூட்டம் மோதும் பேருந்து

கூட்டம் மோதும் பேருந்து

மாஸ்க், சானிடைசர், 30 பயணிகள் மட்டுமே ஏற்றப்பட வேண்டும் என்ற அரசின் முக்கிய விதிகள் நெல்லையில் காற்றில் விடப்பட்டுள்ளன

  • News18
  • Last Updated :
ஜூன் 1ஆம் தேதி ஐந்தாம் கட்ட ஊரடங்கு தொடங்கிய நிலையில், அரசு அறிவிப்பின் படி, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 8 மண்டலங்கல் பிரிக்கப்பட்டு, அந்த மண்டலங்களுக்கிடையே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நெல்லை மண்டலத்தில் 60 சதவீத பயணிகளுடன் 50% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஒரு பேருந்தில் 30 பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும், அனைவரும் முகக் கவசங்கள் அணிந்திருக்க வேண்டும், பயணிகள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும், சானிடைசர் வழங்கப்பட வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நெல்லை மண்டலத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டுப்பாடுகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. குறிப்பாக ஒன்றிரண்டு பேருந்துகள் மட்டும் இயங்கும் தடங்களில் மக்களின் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. பாபநாசம், சங்கரன் கோவில், நாகர் கோவில் வழித்தடங்களில் மக்களின் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

நேற்று முகூர்த்த தினம் என்பதால் வழக்கத்தைவிட பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. 30 பேர் மட்டுமே பயணிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் எழுபது பயணிகளுக்கு குறைவில்லாமல் பேருந்துகள் இயக்கப்படும் நிலை ஏற்பட்டது.

பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் சமூக இடைவெளியை காரணம் காட்டினால் பொதுமக்கள் தகராறில் ஈடுபடும் சூழலும் ஏற்படுகிறது. மாஸ்க் அணிந்து பயணம் செய்தாலும் ,சமூக விலகலை கடைபிடிக்காத நிலை தொடர்கிறது.

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் இதுபோன்ற பயணம் நோய்த்தொற்று எளிதில் பரவ வழி வகுக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பேருந்துகளில் இருக்கைகளை  மற்ற மாநிலங்களைப் போல் தனித்தனியாக அமைத்து 30ஆக குறைத்தால் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியும், அதோடு  கூட்ட நெரிசல் உள்ள வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published:

Tags: CoronaVirus, Lockdown, Nellai

அடுத்த செய்தி