ஒரு தலை காதலால் 8 மாத பெண் குழந்தை வெட்டி கொலை செய்யப்பட்ட கொடூரம்... அதிர்ச்சி சம்பவம்

சிவசங்கரன் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  நெல்லை மகிழடியில் ஒருதலை காதல் விவகாரத்தில் எட்டு மாத பெண் குழந்தை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திருக்குறுங்குடி அருகே உள்ள மகிழடியை சேர்ந்த ஏஞ்சலின் நல்லதாம் - ஆனந்த் செலின் தம்பதி வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது எட்டு மாத பெண் குழந்தை அக்‌ஷயா குயின், தாய்வழி தாத்தா வீடான ரசூல்ராஜ் வீட்டில் வளர்ந்து வந்தார். ரசூல்ராஜின் கடைசி மகளான ஏஞ்சல் பிளஸ்சி, நர்சிங் முடித்துவிட்டு கோவையில் பணிபுரிந்து வருகிறார். இவரை பணகுடியை சேர்ந்த சிவசங்கரன் என்ற இளைஞர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

  இவர் சில தினங்களுக்கு முன்பு பிளஸ்சியை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரன், மண்ணெண்ணெய் கேன் மற்றும் அரிவாளுடன் பிளஸ்சி வீட்டிற்கு சென்றுள்ளார்.

  ரசூல்ராஜ் வெளியே சென்றிருந்த நிலையில், அவது மனைவி எப்சிபாயை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக அவரது கையில் இருந்த குழந்தை அக்‌ஷயா குயின் மீது வெட்டு பட்டதில் குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. தொடர்ந்து எப்சிபாய் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய சிவசங்கரன் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: