நேரு யுவகேந்திரா அமைப்பில் 228 பணியிடங்கள் காலி

இதில் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் 101 இடங்களும், அக்கவுன்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 75 இடங்களும், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு 52 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Web Desk | news18
Updated: December 29, 2018, 6:12 PM IST
நேரு யுவகேந்திரா அமைப்பில் 228 பணியிடங்கள் காலி
நேரு யுவகேந்திராவில் வேலைவாய்ப்பு!
Web Desk | news18
Updated: December 29, 2018, 6:12 PM IST
மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சங்கேதன் அமைப்பில் காலியாகவுள்ள 228 இடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதில் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் 101 இடங்களும், அக்கவுன்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 75 இடங்களும், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு 52 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு வேறுபடுகிறது. மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்ற பணிகளுக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிக்கு முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும், அக்கவுன்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு பட்டப்படிப்புடன் தட்டச்சு, கணினி அறிவு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் (ஆண்கள்)  விண்ணப்பக் கட்டணமாக ரூ.700 செலுத்த வேண்டும். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் (பெண்கள்) ரூ.350 செலுத்தினால் போதும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

கடைசி தேதிவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31. மேலும் விவரங்களுக்கு http://nyks.nic.in/Recruitment/GuidelinesEngDYCACTMTSRevised.pdf, http://nyks.nic.in/ என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

Loading...

Also watch
First published: December 29, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...