23 சீட் கொடுத்தால் மட்டுமே பேசலாம்... அ.தி.மு.கவுக்கு தே.மு.தி.க கிடுக்கிபிடி

23 சீட் கொடுத்தால் மட்டுமே பேசலாம்... அ.தி.மு.கவுக்கு தே.மு.தி.க கிடுக்கிபிடி

விஜயகாந்த்

தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அ.தி.மு.க, தே.மு.தி.க கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்துவருகிறது.

  • Share this:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதனையடுத்து, அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. தி.மு.கவுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படவில்லை. அ.தி.மு.கவுடன் பா.ம.க நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதனையடுத்து, பா.ம.கவுக்கு 23 தொகுதிகள் வழங்குவதாக அ.தி.மு.க அறிவித்தது.

இந்தநிலையில், இருதினங்களுக்கு முன்னர் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அதனையடுத்து, இன்று அமைச்சர் தங்கமணி இல்லத்தில் வைத்து தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. அந்த பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. தேமுதிக 23 தொகுதிகள் வரை அதிமுக கூட்டணியில் கேட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க தரப்பிலிருந்து தே.மு.தி.கவிற்கு 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க இயலும் என தெரிவித்து வருகின்றனர். அதனால், அ.தி.மு.க, தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முன்வந்தால் மட்டுமே நாளை பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க செல்லும் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்கிடையில், பிரேமலதா விஜயகாந்த்துடன் தேர்தல் பேச்சுவார்த்தைக் குழு சாலிகிராமம் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: