நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தருமபுரி மாணவரின் உடலை வாங்க மறுப்பு- பெற்றோர்கள் போராட்டம்

நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தருமபுரி மாணவரின் உடலை வாங்க மறுப்பு- பெற்றோர்கள் போராட்டம்

தருமபுரி மாணவரின் உடலை வாங்க மறுப்பு- பெற்றோர்கள் போராட்டம்

தருமபுரியில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 • Share this:
  தமிழகத்தில் நீட் தேர்வு எழுதவிருந்த ஒரு மாணவியும், 2 மாணவர்களும், தேர்வு அச்சத்தால் நேற்று தற்கொலை செய்து கொண்டனர். இதில், மதுரை மாணவி துர்காவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. நாமக்கல் மாணவர் மோதிலால் உடல், இன்று காலை அடக்கம் செய்யப்பட்டது.

  தருமபுரி மாணவர் ஆதித்யாவின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால், தருமபுரி மருத்துவமனையில் போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். மாணவர் உடலுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

  மாணவரின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுத்து


  Also read: திமுக நீட் தேர்வை ரத்துசெய்வதாக சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது - அண்ணாமலை  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தங்களுக்கு அறிவிக்காமல் பிரேதப் பரிசோதனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடலை பெறாமல் பெற்றோர்களும், உறவினர்களும் போராட்டத்தை தொடர்கின்றனர்.

  இதனிடையே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, மதுரையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நரிமேட்டில் உள்ள பள்ளியில் தேர்வு மையம் அருகே போராட்டம் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
  Published by:Rizwan
  First published: