நீட் தேர்வு குறித்து தவறான பரப்புரை - பாஜக நிர்வாகி கண்டனம்

Youtube Video

நீட் தேர்வு வந்த பிறகு 400 க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக வினோஜ் செல்வம் தெரிவித்தார்.

 • Share this:
  நீட் தேர்வு, ஒளிப்பதிவு சட்ட வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, நடிகர் சூர்யாவை கண்டித்து பாஜக மாநில இளைஞரணி செயற்குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் வார்த்தையை கொச்சைப்படுத்தியதாக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கூட்டத்தில் மொத்தம் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  * பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் ஜெய்ஹிந்த் எனும் வார்த்தையை இழிவுபடுத்திய திருச்செங்கோடு பேரவை உறுப்பினர் ஈஸ்வரனுக்கு கண்டனம்.

  * ஒன்றிய அரசின் மக்கள் நலத்திட்டம், சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பத்திற்காகத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார் நடிகர் சூர்யா. அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் பாஜக இளைஞரணி சார்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  * நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும், திமுக அரசுக்கு கண்டனம்.

  * கோவில் நிலங்களை மீட்க முதல்வர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீட்கப்படும் நிலங்களை உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

  * கொரோனா இரண்டாவது அலையை வெற்றிகரமாக எதிர்கொண்ட பிரதமர் மோடிக்கு மனப்பூர்வமான பாராட்டுகள்.

  * நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் உடனடியாக திறக்க வேண்டும்.

  * திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, சமையல் எரிவாயு மானியம், கும்பத் தலைவிகளுக்கு மாத ஊதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

  கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக இளைஞரணி செயலாளர், வினோஜ் செல்வம், நீட் தேர்வு வந்த பிறகு 400 க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாகவும், நீட் தொடர்பாக நடிகர் சூர்யா தவறாக பரப்புரை செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
  Published by:Muthukumar
  First published: