• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Neet Exam: நீட் தேர்வுக்கு தீர்மானம் மட்டும் தீர்வாகாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Neet Exam: நீட் தேர்வுக்கு தீர்மானம் மட்டும் தீர்வாகாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று முதல் முறையாக கூடும் நிலையில் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உள்ளது.

  • Share this:
நீட் தேர்வு தொடர்பாக சந்தேகம் வேண்டாம், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிச்சயம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விலக்கு பெற்று தருவார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நடைமுறையில் இருந்து வரும் நீட் தேர்வினை ரத்து செய்வோம் என்பதே திமுகவின் நிலைப்பாடு என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விலக்கு பெறும் வரை நீட் தேர்வு உண்டு, நீட் தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும் என விளக்கம் அளித்தார்.

திமுக தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த பின்னர் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று முதல் முறையாக கூடும் நிலையில் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உள்ளது.

Also Read:   India Post: இந்திய தபால் துறையின் மாதாந்திர வருமான திட்டம் - அறிய வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்

இதனிடையே நீட் தேர்வு குறித்து சுகாதார துறை அமைச்சரான மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நீட் தேர்வு தொடர்பாக சந்தேகம் வேண்டாம் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிச்சயம் முதல்வர் ஸ்டாலின் விலக்கு பெற்று தருவார் என கூறினார்.
அதே நேரத்தில் நீட் தேர்வுக்கு தீர்மானம் மட்டுமே தீர்வாகாது எனவும் அவர் கூறினார்.

செங்கல்பட்டு மற்றும் குன்னூர் தடுப்பூசி மையங்கள் செயல்படுத்த ஒன்றிய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் அனுமதி கிடைத்தால் நாட்டுக்கே நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Also Read:   இந்தியாவில் அசுர வளர்ச்சியை நோக்கி Gaming துறை! குவியும் முதலீடுகள்

கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக ஜூன் 23ம் தேதிக்குள் நீட் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: