நீட் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்தார் டி.கே.ரங்கராஜன்

news18
Updated: July 11, 2018, 7:33 PM IST
நீட் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்தார் டி.கே.ரங்கராஜன்
கோப்புப் படம்
news18
Updated: July 11, 2018, 7:33 PM IST
நீட் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யலாம் என்ற அடிப்படையில் மனுதாரர் டி.கே.ரங்கராஜன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 6ம் தேதி நடைபெற்றது. இதற்கு, ஆங்கிலம், இந்தி மற்றும் 9 பிராந்திய மொழிகளில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. தமிழ் மொழியில் வழங்கப்பட்ட வினாத்தாளில் 49 கேள்விகள் ஆங்கிலத்திலிருந்து தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவறாக மொழிபெயர்த்த 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்களை, கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.  அத்துடன், புதிய தர வரிசைப்பட்டியல் தயாரித்து கலந்தாய்வை நடத்த வேண்டும்  என்றும் அதுவரை தற்போது நடைபெற்று வரும் கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படலாம் என்ற அடிப்படையில்,  தன்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், உச்சநீதிமன்றதில் டி.கே.ரங்கராஜன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிபிஎஸ்இ எடுக்கவுள்ள நடவடிக்கையை பொறுத்து, தமிழக மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...