நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் - மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் - மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜே.இ.இ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையும் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா பரவலால் பயணம் கொள்வதிலும் தங்குவதிலும் மாணவர்களுக்கு உள்ள சிரமங்களையும், பீகார், அசாம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கையும் காரணம் காட்டி நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகள் இவ்விரு தேர்வுகளையும் ரத்து செய்யுமாறு கோரி வருகின்றன.

  இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.

  இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ”ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன். அதற்கான முயற்சியை எடுத்த அன்னை சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.  மேலும் கூறுகையில், “நீட் எதிர்ப்பு உண்மையெனில் 7 மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். கடிதம் எழுதி இருக்கிறாராம் அமைச்சர் விஜயபாஸ்கர். சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் இவரின் கடிதத்தையா மதிக்கப் போகிறார்கள்? ஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
  Published by:Rizwan
  First published: