Home /News /tamil-nadu /

தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்: திமுக எம்பி டி.ஆர். பாலு வலியுறுத்தல்

தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்: திமுக எம்பி டி.ஆர். பாலு வலியுறுத்தல்

தமிழக எம்பி குழு

தமிழக எம்பி குழு

நீட் விலக்கு மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. எனவே, காலம் தாழ்த்தும் ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்

மேலும் படிக்கவும் ...
    நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

    மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடக்கம் முதலே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், திமுக தலைமையிலான அரசு அமைந்தது, கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் நீட் விலக்கு எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனிடையே, மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் செயலாளரிடம் மனு அளித்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க பலமுறை முயன்றும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

    இதையும் படிக்க: அரசு பணியாளர்கள் ஜனவரி 9ம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: தமிழக அரசு


    இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை சட்டமாக்க ஆளுநரே அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.ஆனால், தமிழ்நாடு ஆளுநர் வேண்டுமென்றே நீட் விலக்கு மசோதாவை மத்திய உள்துறைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார். நீட் விலக்கு மசோதா சட்டம் ஆகாமல் இருக்க மாநில ஆளுநர் ஆர்.என். ரவியே காரணம் என்பதால் அவர் பதவி விலக வேண்டும்  என்று தெரிவித்தார்.

    மேலும் படிங்க: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு

    Published by:Murugesh M
    First published:

    Tags: DMK, Neet, Tamil Nadu Governor

    அடுத்த செய்தி