ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீட் விவகாரத்தில் தேவைப்பட்டால் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் - முதலமைச்சர் அறிவிப்பு

நீட் விவகாரத்தில் தேவைப்பட்டால் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் - முதலமைச்சர் அறிவிப்பு

பேரவையில் உரையாற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

பேரவையில் உரையாற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நீட் விலக்கு விவகாரத்தில் பல முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட இரு மசோதாக்கள், 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு நேற்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

  இந்த விவகாரம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின், “இரு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு 21 மாதங்களுக்கு மேல் ஆகி உள்ளது

  ஆனால், தமிழக அரசு இதனை மறைத்துள்ளது. புதிதாக மீண்டும் புதிய இரண்டு மசோதாக்களை நிறைவேற்ற குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பீர்கள்?’ என்று கூறினார்.

  இதற்க்குப் பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், ”எந்த தகவலையும் இந்த அரசு, அவைக்கு மறைக்கவில்லை

  திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களில், நிறுத்தி வைப்பு என்றே தெரிவித்து அனுப்பி உள்ளது. காரணங்கள் என்ன? என்று கேட்டு கடிதம் எழுதியிருக்கிறோம். காரணங்கள் தெரிந்தால் மட்டும் தான் திருத்தி அனுப்ப முடியும்

  இதுவரை, மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக தமிழக அரசுக்கு எந்த தகவலையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.

  “இரண்டு ஆண்டுகளாக அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கிறீர்கள். ஆனால் அதே நிலை தான் நீடிக்கிறது.

  இப்படி போனால் என்ன நிலை?” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

  தமிழக மாணவர்களின் நலன் கருதி பலமுறை இவ்விவகாரத்தில் கடிதம் எழுதினோம். ஆனால், மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

  மேலும், இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க  தேவைப்பட்டால் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

  Published by:Sankar
  First published:

  Tags: Neet Exam, TN Assembly