நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் நீதிபதிகள் கிடுக்குப்பிடி கேள்வி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் நீதிபதிகள் கிடுக்குப்பிடி கேள்வி

சென்னை உயர்நீதிமன்றம்.

  • Share this:
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 15ம் தேதிக்குள் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 நிர்வாக ஒதுக்கீடு இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவை சேர்ந்த தீரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது, அதிகாரிகள் துணையில்லாமல் முறைகேடு நடத்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறிய அவர்கள், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது எத்தனை பேர், எவ்வளவு பணம் கை மாறியது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் ஆள்மாறாட்டம் தமிழகம் மட்டுமின்றி வேறு மாநிலத்தில் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கருத்து கூறிய நீதிபதிகள், மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்க ஆணையிட்டனர்.

Also Watch

Published by:Vijay R
First published: