நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : சென்னை மாணவி தாயுடன் கைது

news18
Updated: October 12, 2019, 12:21 PM IST
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : சென்னை மாணவி தாயுடன் கைது
கோப்பு படம்
news18
Updated: October 12, 2019, 12:21 PM IST
நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான மருத்துவ மாணவர்கள் பிரவின், ராகுல் மற்றும்  சரவணன், டேவிட் ஆகியோரது நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக அவர்களது 15 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்தநிலையில் மீண்டும் அக்டோபர் 25-ம் தேதி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவரை கைது செய்து தேனிக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் அவரது தாயையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எற்கனவே நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் வழக்கில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 6-வதாக மாணவி ஒருவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: தாலி இங்கே... கணவர் எங்கே... கோவில்பட்டி பெண் புகார்

Loading...

First published: October 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...