ஆள் மாறாட்ட விவகாரம்! முதலாமாண்டு மாணவர்களின் கைரேகைகளைப் பெற உத்தரவு

ஆள் மாறாட்ட விவகாரம்! முதலாமாண்டு மாணவர்களின் கைரேகைகளைப் பெற உத்தரவு

மாதிரிப் படம்

தேசிய தேர்வு முகமையிடம் உள்ள மாணவர்களின் கைரேகையுடன் அதனை ஒப்பிட்டு பார்த்து, முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் எனவும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நீட் தேர்வில் நடைபெற்ற ஆள் மாறாட்ட மோசடியைத் தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்களின் கைரேகைகளை பெற வேண்டும் என மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், நான்கு மாணவர்கள் உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடப்பு ஆண்டில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களின் கைரேகைகளையும் பெறுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையிடம் உள்ள மாணவர்களின் கைரேகையுடன் அதனை ஒப்பிட்டு பார்த்து, முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் எனவும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள 11 தனியார் கல்லூரிகளில், 7 கல்லூரிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைதுள்ளன.

Also see:

Published by:Karthick S
First published: