• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் - மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் - மா.சுப்பிரமணியன்

மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என்றும், அவர் நிச்சயம் அதற்கு ஒப்புதல் அளிப்பார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "நீதிபதி ஏ.கே.ராஜன் மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். நீட் தேர்வு என்பது அனுமதிக்கப்பட்டால், தமிழகத்தின் கல்வி வளர்ச்சி என்பது 75 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும் என்று, அதனால்தான் தமிழக முதல்வர் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

    கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைகிறார்கள் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் 85 ஆயிரம் பேர் நீட் தேர்வால் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதில்தான் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளைத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

    அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர், மருத்துவம் பயில்வதற்கு சேர்க்கை விகிதங்கள் குறைவு என்பதற்கு பல்வேறுக் காரணங்களை எடுத்துச்சொல்லலாம். அந்த சதவிகிதத்தைக் கூடுதலாக்குவதற்குத்தான் தமிழக முதல்வர் அண்மையில் சட்டப்பேரவையில் தொழிற்கல்வி பயில்கிற மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு என்கிற சிறப்பானத் திட்டத்தை அறிவித்து, நேற்றைக்கு தொழிற்கல்வி பயில இருக்கிற மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கியிருக்கிறார்.

    சேர்க்கை ஆணைகளை வழங்குகிறபோதே, நேற்றைக்கு ஒரு திட்டத்தை அறிவித்தார். 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் தொழிற்கல்வி பொறியியல், மீன்வளம், சட்டம் போன்ற பல்வேறு தொழிற்கல்வி பயில்கிற மாணவர்களுக்கு கட்டண விலக்கு அளித்து அரசுப் பள்ளியில் பயில்கிற மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர்.

    சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரிடமிருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். தமிழக மாணவர்களின் மனநிலையைக் கருத்தில்கொண்டும், நீதிபதியின் சட்ட முன்வடிவை படித்துப் பார்க்கும்போது நிச்சயமாக இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: