Home /News /tamil-nadu /

நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் இருக்கிறது - ஆளுநர் மாளிகை விளக்கம்

நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் இருக்கிறது - ஆளுநர் மாளிகை விளக்கம்

Raj Bhawan

Raj Bhawan

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக எம்பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்திக்க இருக்கின்றனர்..

    நீட் விலக்கு மசோதா இன்னும் பரிசீலனையில் தான் இருக்கிறது என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் தந்துள்ளது.

    நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றை தேர்வாக நீட் (NEET) இருந்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் பல மாணவர்கள் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகின்றன. நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகம் தொர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவையும் தமிழக அரசு அமைத்தது. இக்குழுவும் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தது.



    சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா கடந்த செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 3 மாதங்கள் ஆகியும் இதுவரை இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    Also read:  நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக எம்.பி.க்கள் குழு இன்று அமித்ஷாவை சந்திக்கிறது

    இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இந்த மசோதா இன்னும் ஆளுநரின் பரீசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதே போல தமிழக அரசுக்கு பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு, தமிழக அரசு, இன்னும் தனக்கு பதில் அளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Also read:  கனிமொழி - உதயநிதி இடையே அதிகார போட்டி?

    திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்.பிக்கள் அடங்கிய குழு, நேற்று நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மனுவை குடியரசு தலைவரிடம் அளித்தனர். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக எம்பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்திக்க இருக்கின்றனர்..

     

     
    Published by:Arun
    First published:

    Tags: Neet, Neet Exam

    அடுத்த செய்தி