திமுக ஆட்சிக்கு வரும்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வரும்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக ஆட்சி அமையும் போது, நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

 • Share this:
  இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சி தமிழகத்தில் அமையும்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரியலூர் அனிதா தொடங்கி மதுரை ஜோதிஸ்ரீ துர்கா வரையிலான தற்கொலைகள் பரிதவிக்க வைத்துள்ளதாக கூறியுள்ளார். இரண்டு அரசாங்கங்களாலும் வளர்க்கப்பட்ட இந்த நீட் தேர்வுக்காக மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.  Also read: கிருஷ்ணகிரி: ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களால் போஸ்டர் குழப்பம்..

  இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சி தமிழகத்தில் அமையும்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

  நீட் தேர்வினால் மருத்துவ வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கும், அவர்கள் மருத்துவம் படிக்க மீண்டும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் எனவும் கூறியுள்ளார். அதற்காக எந்தவிதமான சட்டப்போராட்டத்தையும், ஆட்சிப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும் எனவும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
  Published by:Rizwan
  First published: