Neet Exam : ஒரே குழப்பமாக இருக்கு, நீட் தேர்வு எழுதும் ஆர்வமில்லை - மாணவர்கள் கருத்து

Youtube Video

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சிகளை முறையாக நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  • Share this:
    அரசு பள்ளி மாணவர்களுக்கென அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு இலவச பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. 413 அரசு பயிற்சி மையங்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதேபோல, சிறப்பு நுழைவுத் தேர்வு மூலம், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டு, தனியார் கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

    கடந்த ஆண்டில் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 1,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டு, ஜனவரி 12-ம் தேதிவரை நடைபெற்றது.

    12--ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டதால், நீட் வகுப்புகள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு, நீட் பயிற்சி வகுப்பு முறையாக நடைபெறவில்லை. நீட் தேர்வு ரத்துசெய்யப்படும் என்ற நம்பிக்கையோடு இருந்த நிலையில், தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நீட் தேர்வு எழுதும் விருப்பம் இல்லை என்று பலர் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

     

    நீட் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக அரசு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு பள்ளி வகுப்புகள் நடைபெறாத நிலையில், நீட் பயிற்சியும் வழங்கப்படாவிட்டால், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

    ALSO READ |  மருத்துவ கலந்தாய்வுக்கு முன் பொறியியல் கலந்தாய்வை நடத்துவதால் பாதிப்பு என்ன?

    இந்நிலையில், டுவிட்டரில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: