நீட் தேர்வு தொடங்கியது: தமிழகத்தில் மட்டும் 1.17 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்

நீட் தேர்வு தொடங்கியது: தமிழகத்தில் மட்டும் 1.17 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்

கோப்பு படம்

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

 • Share this:
  வழக்கமாக மே மாதத்தில் நடைபெறும் நீட் தேர்வு கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டது. மே 3 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்ட தேர்வு இன்று நடைபெறுகிறது.

  நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15,97,000 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 1,17,000 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர். இதற்காக சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேர்வு மைய வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.


  உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர். தேர்வு பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்தாலும், மாணவர்கள் காலை 11 மணி முதலே மையத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
  Published by:Karthick S
  First published: