நீட் தேர்வால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது; அது பயனில்லாத திட்டம் - ராகுல் காந்தி

நீட் தேர்வால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது; அது பயனில்லாத திட்டம் - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

நீட் ஒரு பயனில்லாத திட்டம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  • Share this:
காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி, தமிழகத்துக்கு மூன்று நாள் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்துள்ளார். நேற்று திருநெல்வேலி, தென்காசியில் மக்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரிக்குச் சென்றுள்ளார். கன்னியாகுமரியிலுள்ள முளகுமூடு தூய ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளை ராகுல்காந்தி கண்டுகளித்தார். மாணவர்களின் வழுக்கு மர ஏற்றம், யோகா, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய அவர், ‘ஒரு நாள் நான் என் கைக்கும், ஒரு நாள் என் காலுக்கும், ஒரு நாள் என் மேல் நெஞ்சுக்கும் என பயிற்சி கொடுக்கிறேன். இதனால் என்னால் முழுமையாக என் உடலைப் பேண முடிகிறது. இதே போல் நீங்களும் முயற்சி செய்யவேண்டும். நாட்டுக்கும் இதே தான் தேவை. சமநிலை என்பது நாட்டுக்கு இப்போது தேவை. பயிற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது. அதேபோல இலவசமாய் அரசு தரும் பொருட்கள் எந்த வகையில் வந்தது என்று இதுவரை தெரியவில்லை. எல்லாப் பொருளுக்கும் விலை இருக்கிறது. தொடர்ந்து பயிற்சிகள் செய்தால் எதுவும் சாத்தியம் என மாணவ மாணவிகளிடம் கூறிய ராகுல் இதை தொடர்ந்து மாணவி ஒருவர் உடற்பயிற்சி குறித்து கேள்வி கேட்க, உடனடியாக தரையில் படுத்து தண்டால் எடுத்தார். ஒரு நிமிடத்தில் மாணவியை விட அதிகமான தண்டால்களை எடுத்தார் ராகுல் காந்தி. மாணவிக்கு சவால் விடும் வகையில் ஒரு கையாலும் தண்டால் எடுத்தார். ஆனால் அந்த மாணவியால் அதை செய்ய முடியவில்லை.

தொடர்ந்து பேசிய அவர், ‘ஆசிரியர்களும் மாணவர்களும் கல்வித்துறையின் தூண்கள். இருவருமே முக்கியமானவர்கள். எந்த ஒரு திட்டத்தையும், மாணவர்களையும் ஆசிரியர்களையும் விவாதிக்காமல் கொண்டுவந்தால் அதை வீணாகத்தான் போகும். நீட் தேர்வு பல மாணவர்களின் கனவுகளை பலிவாங்குகிறது. நான், ஒரு மாணவனாக இல்லாமல் ஆசிரியராக இல்லாமல் உங்களை இப்படி படிக்கவேண்டும் என்று சொல்வது ஆதிக்கமானது. அதே சமயத்தில் உங்களுக்கு என்ன தேவை? என்னென்ன விஷயங்கள் செய்யலாம் என்று உங்களிடம் கேட்கலாம். நீங்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். நான், ஒருவொருடைய கனவை இன்னொருவர் மீது திணிக்க முடியாது. நீட் தமிழகத்தில் பிரச்சினைக்கு உரியதாக இருக்கிறது இது பயனில்லாத திட்டம்’ என்று தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: