மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு - சாதக, பாதகங்கள் என்னென்ன? அறிக்கை தாக்கல்

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு - சாதக, பாதகங்கள் என்னென்ன? அறிக்கை தாக்கல்

முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்த நீதிபதி கலையரசன்

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட கலையரசன் குழு தங்களது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், சுகாதாரத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

  இந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதுடன், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், உள்ளிட்டோரிடம் கருத்துகளைப் பெறுவதற்கான கூட்டங்களை நடத்தியது.

  மே மாதம் முடிவில் அறிக்கை தாக்கல் செய்ய அரசாணை வெளியிட்டப்பட்ட நிலையில், கொரோனா தொற்று காரணமாக அறிக்கையை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஜூன் 15ம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டது.

  இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு தனது அறிக்கையை இன்று சமர்பித்தது.

  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15 விழுக்காடு வரை மருத்துவப் படிப்பில் சேர தனி இடஒதுக்கீடு அளிப்பதற்கு பரிந்துரக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  அரசு, மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள், ஆதி திராவிடர் பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் இயற்ற அரசு பரிசீலிக்கவுள்ளதாக கடந்த மாதம் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  Also See: புதிய வகை கொரோனா வைரஸால் மேலும் ஆபத்தா? விஞ்ஞானி விளக்கம்

  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Published by:Sankar
  First published: