Home /News /tamil-nadu /

தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சு

தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சு

அமைச்சர் பொன்முடி பேச்சு

அமைச்சர் பொன்முடி பேச்சு

நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி. கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம்  கோரிக்கையாக வைத்திருக்கிறேன் என அமைச்சர் பொன்முடி பேசினார்.

    தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு பயன்படுவதாக சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேசினார்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.  பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,இந்தியாவின் தலைச் சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என தெரிவித்தார்.

    மேலும், கல்வியின், சுகாதாரமும் இரண்டு கண்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ளார்.  சென்னை பல்கலைக்கழகத்தில் படிப்பதே பெருமைதான். முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்தான். பல்வேறு புகழ்பெற்ற நபர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துள்ளனர்.
    நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி. கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம்  கோரிக்கையாக வைத்திருக்கிறேன்.

    கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக நீட்  உள்ளது. நீட் உள்ளிட்ட எந்த தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குதான்  வழி வகுக்கும். நீட் போன்று நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது.



    எந்த படிப்பாக இருந்தாலும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தேவை.  மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால் பல்கலைக்கழகங்களில் கல்வி இன்னும் வளரும்  என அமைச்சர் பொன்முடி பேசினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Minister Ponmudi, Neet Exam

    அடுத்த செய்தி