இடைத்தரகருக்கு ₹ 20 லட்சம்...! நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் வெளியான பரபரப்பு தகவல்கள்

இடைத்தரகருக்கு ₹ 20 லட்சம்...! நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் வெளியான பரபரப்பு தகவல்கள்

நீட் தேர்வு (கோப்புப் படம்)

 • News18
 • Last Updated :
 • Share this:
  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர், இடைத்தரகருக்கு 20 லட்சம் ரூபாய் கமிஷன் கொடுத்தது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

  சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு பயிலும் மாணவர் ஒருவர் , நீட் தேர்வில் மோசடியாக வெற்றி பெற்று இருக்கலாம் என போலீசாரிடம் கல்லூரியின் முதல்வர் புகார் அளித்தார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த மாணவரையும் மற்றும் அவரது தந்தை தேவேந்திரனையும் ஓசூரில் பிடித்த சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

  அதில், 2018-19ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், பீகார் மாநிலம், கயாவில் தேர்வு எழுத விண்ணப்பித்ததும், அங்கு, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதும் தெரியவந்துள்ளது. இதற்காக 20 லட்சம் ரூபாயை மாணவரின் தந்தை கமிஷனமாக கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களை கைது செய்த போலீசார், மேலும் சில மாணவர்கள் இதேபோல் முறைகேடு செய்திருப்பது தெரியவந்திருப்பதாக கூறியுள்ளனர்.

  2018-19ல் நீட் தேர்வு எழுதி வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்க மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
  Published by:Sankar
  First published: