நாடு முழுவதும் ‘நீட்’ பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து, அதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா தொற்றுக்கு இடையில்
‘நீட்' தேர்வு நடைபெற இருப்பதால், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், தேர்வு நடைபெறும் நகரங்களும், அங்குள்ள மையங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த ஆண்டு 155 நகரங்களில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 198 நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே நாடு முழுவதும் இந்த தேர்வு 3,862 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கையும் இந்த ஆண்டு அதிகரிக்கப்படவுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கூடுதலாக 4 நகரங்களில் ‘நீட்’ தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பதிவில், ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தமிழக சுகாதார
அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்னை சந்தித்தார். அவரிடம் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் பின்னணி குறித்து விளக்கப்பட்டது.
மேலும், ஏற்கெனவே தமிழ் உள்பட 11 மொழிகளில்
‘நீட்’ தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக மலையாளம், பஞ்சாபி என கூடுதலாக 2 மொழிகள் சேர்க்கப்பட்டு, 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது என்பதையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன்.
Must Read : சென்னையில் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கை : சோதனைகளை கடுமையாக்க மாநகராட்சி முடிவு
தமிழக மாணவர்களின் வசதிக்காக செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 4 நகரங்களில் ‘நீட்’ தேர்வு நடத்துவதற்கு சேர்க்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 14 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் தற்போது 18 நகரங்களில் நடக்க இருக்கிறது. இதேபோல், தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.