நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

 • News18
 • Last Updated :
 • Share this:
  நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

  பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

  அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கியது.

  இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன்(31.12.2019) இரவு (11.59) மணிக்கு நிறைவு பெறவிருந்த நிலையில், ஜனவரி 6- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: www.nta.ac.in, ntaneet.nic.in அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

  Also see:

  Published by:Karthick S
  First published: