ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீட் தேர்வு விவகாரம்: நாளை காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்

நீட் தேர்வு விவகாரம்: நாளை காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்

சட்டப்பேரவை

சட்டப்பேரவை

All party meet | நீட் தேர்வு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நாளை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று சட்டம் உள்ளது. நீட் தேர்வினால் ஏழை மற்றும் கிராமப் புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று தமிழ்நாட்டில் தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. அ.தி.மு.க ஆட்சியிலிருந்தே நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கப்பெறவில்லை.

  இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குகோரி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த மசோதாவுக்கு இதுவரையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

  இந்தவிவகாரம் குறித்து நேற்று சட்டப்பேரவையில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குகோரும் சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான அரசியல், சட்ட, மக்கள் போராட்டம் தொடரும் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும்’ என்று தெரிவித்தார்.

  NEET Exam : நீட் தேர்வில் இருந்து விலக்கு... நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்

   இந்தநிலையில் அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6-ம் தேதி நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார். இதுகுறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: All Party Meeting