Home /News /tamil-nadu /

நீட் தேர்வு இருக்கும் வரை மாணவர்களை தயார்ப்படுத்தி தான் ஆக வேண்டும் - அமைச்சர் பொன்முடி பேச்சு

நீட் தேர்வு இருக்கும் வரை மாணவர்களை தயார்ப்படுத்தி தான் ஆக வேண்டும் - அமைச்சர் பொன்முடி பேச்சு

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என தெரிவித்த அவர், நீட் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    நீட் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

    சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது அதில் தமிழ்நாட்டின் தேர்ச்சி சதவீதம் வழக்கத்தை விட குறைவாக இருந்தது. மேலும் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 35% த்திற்கும் குறைவாக இருந்தது.

    இது குறித்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய போது, வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கப்படும் என பதலளித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என தெரிவித்த அவர், நீட் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

    மேலும் மும்மொழி கொள்கையை கட்டாயம் ஆக்க கூடாது என பேசிய அவர், தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் முக்கியம் எனவும் தேர்வு எழுதும் மொழியாக தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும் என கூறினார்.

    இதையும் வாசிக்க: மெரினாவில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்.. மத்திய அரசு முதற்கட்ட அனுமதி!!..

    மாணவர்களை புத்தக பூச்சிகளாக மாற்றிவிட வேண்டாம் எனவும் தொழில் பயிற்சியில் ஆர்வம் உடையவர்களாக மாற்ற வேண்டும் என எனவும் கூறினார். நீட் இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்து தான் ஆக வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் கல்வி நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Minister Ponmudi, Neet Exam, Tamilnadu

    அடுத்த செய்தி