Home /News /tamil-nadu /

18 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நாங்க வரல.. பாஜக அண்ணாமலை அதிரடி அறிக்கை

18 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நாங்க வரல.. பாஜக அண்ணாமலை அதிரடி அறிக்கை

அண்ணாமலை

அண்ணாமலை

NEET Exam | Annamali | MK Stalin | நீட் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். நீட் விலக்கு மசோதா பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மாணவர்களுக்கு எதிராக உள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

    இதனை தொடர்ந்து, நீட் தேர்வு தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அனைவரிடமும் கருத்தொற்றுமை நிலவி வருகிறது. நீட்விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியநிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராய பிப்ரவி 05 தேதி காலை 11 மணிக்கு அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும். சட்டத்திற்கு அடிப்படையான கூற்றுக்கள் தவறானவை என ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்கத்தக்கதல்ல என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    Also Read : பிரதமர் மோடி கெட்டப்பில் வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்

    இந்நிலையில் நீட் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாது என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் சட்ட முன்வடிவு குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது ஏன் உள்ளிட்ட 18 கேள்விகளை எழுப்பி உள்ளார்.



    தமிழக அரசுக்கும் மக்கள் நலனுக்காக முழு ஒத்துழைப்பு கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் அதில் உண்மை இருக்க வேண்டும். நேர்மை இருக்க வேண்டும். மக்களை ஏமாற்றும் பிரச்னைகளுக்கு நாங்கள் துணை நிற்க மாட்டோம். ஆகவே நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கண்துடைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விலகிக் கொள்கிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Annamalai, BJP, DMK, MK Stalin

    அடுத்த செய்தி