• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீட் பயிற்சி சந்தையின் மதிப்பு ரூ.5750 கோடி; தமிழ் வழி மாணவர்கள் பாதிப்பு: ஏ.கே.ராஜன் குழு கூறுவது என்ன?

நீட் பயிற்சி சந்தையின் மதிப்பு ரூ.5750 கோடி; தமிழ் வழி மாணவர்கள் பாதிப்பு: ஏ.கே.ராஜன் குழு கூறுவது என்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாதபடி நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் ஏ.கே.ராஜன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கலாச்சார, பிராந்திய, மொழியியல் மற்றும் சமூகப் பொருளாதார ரீதியாக நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Share this:

    நீட் தேர்வின் தாக்கம் குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. 165 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் தமிழகத்தில் நீட் தேர்வல் தொடர்ந்து நடந்தால், சுகாதார கட்டமைப்பு, கல்வி பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


    நீட் என்பது  ஒரு சார்பு கொண்டது என்றும்  பொதுவான தரநிலைகள் மற்றும் அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும் ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ளது.  சிபிஎஸ்இ வழியில் படித்தவர்கள் நீட் தேர்வு மூலம் அதிகம் மருத்துவ படிப்பில் இடம் பெறுகின்றனர். 2015-16ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சிபிஎஸ்இ வழியில் படித்தவர்கள் சேரும் விகிதம் பூஜ்ஜியம் சதவீதமாக இருந்தது. ஆனால் 2020-21ம் ஆண்டு காலக்கட்டத்தில் இது 26.83 சதவீதமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் வழிப் கல்வி பயின்றவர்கள் பாதிப்பு

    தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் நீட் தேர்வு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2010-11ல் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களில் தமிழ்வழியில் படித்த மாணவர்களின் விகிதம் கிட்டத்தட்ட 20 சதவீதமாக இருந்தது. அனால், 2020-21ல் இது  2 சதவீதத்திற்கும் கீழே வந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளியில் பயின்றவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப் பின்னர் குறைந்துவிட்டது. தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் அது மீண்டும் அதிகரித்துள்ளது.  இதேபோல் முதல் தலைமுறை பட்டதாரிகள் மருத்துவ படிப்பில் சேர்வதும் நீட் தேர்வால் குறைந்துள்ளது. கடந்த 2010-2011ல் 24.61 % இருந்த இந்த எண்ணிக்கை 2020-2021ல்  14.46%  ஆக  குறைந்துள்ளது.

    இதையும் படிங்க: 12-ம் வகுப்பு அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை- ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு


    நீட் பயிற்சி நிலையங்களின் அசூர வளர்ச்சி:

    கற்றலை (learning) ஊக்குவிப்பதற்கு மாறாக பயிற்சியை (coaching)  நீட் ஊக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட பின்னர் அதற்கு பயிற்சி அளிக்கும் நிலையங்கள் புற்றீசல் போல் முளைத்து வருகின்றன. தற்போது, 400க்கும் மேலாக நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் ஆண்டு வருவாய் சுமார் ரூ.5750 கோடி ஆகும்.

    இதேபோல், முதன் முறையாக மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட மீண்டும் மீண்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு (Repeaters) மருத்துவ படிப்பில் இடம் கிடைப்பதும் அதிகரித்துள்ளது. 2016-17ம் ஆண்டில் இது 12.47% இருந்த நிலையில் தற்போது  71.42 % உயர்ந்துள்ளது.  எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான பயிற்சிக்காக இவர்கள் சராசரியாக ரூ.10 லட்சம் வரை செலவு செய்கின்றனர்.

    இதனால் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாதபடி நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் ஏ.கே.ராஜன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கலாச்சார, பிராந்திய, மொழியியல் மற்றும் சமூகப் பொருளாதார ரீதியாக நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவர்கள் தட்டுப்பாடு ஏற்படும்

    தமிழகத்தில் நீட் தேர்வல் தொடர்ந்து நடந்தால், சுகாதார கட்டமைப்பு, கல்வி பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும். அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வை 12ம் வகுப்பு மதிப்பெண் முடிவில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: