நீட் தேர்வு எழுதவிருந்த மற்றொரு மாணவர் உயிரை மாய்த்துக்கொண்டார்... ஒரே நாளில் மூவர் தற்கொலை

நீட் தேர்வு எழுதவிருந்த மற்றொரு மாணவர் உயிரை மாய்த்துக்கொண்டார்... ஒரே நாளில் மூவர் தற்கொலை

மாதிரிப் படம்

  • Share this:
நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதி துர்கா,  தருமபுரி மாணவர் ஆதித்யா ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு மாணவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையைச் சேர்ந்த காவல்துறையில் பணியாற்றும் முருகசுந்தரம்என்பவரின் 2-வது மகள் ஜோதி துர்கா மருத்துவர் கனவுடன் நீட் தேர்விற்கு தயாராகிவந்தார்.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் இருந்த அவர், இந்த முறை தேர்ச்சியடையும் உத்வேகத்துடன், பயிற்சி மையத்திற்கு சென்றும், வீட்டிலும் இரவு, பகலாக படித்துவந்தார். நீட் தேர்விற்கு ஒரு நாள் தான் இருக்கிறது என்ற நிலையில் படிப்பில் மூழ்கியிருந்தார்.

ஆனால், இந்த முறையும் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சமடைந்த அவர், உருக்கமான ஆடியோ ஒன்றை பதிவு செய்துவைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாளை நீட் எழுத இருந்த தருமபுரியை சேர்ந்த மாணவன் ஆதித்யா என்பவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



நீட் தேர்வுக்காக தயராகி வந்த மாணவன் திடீரென இந்த முடிவை எடுத்துள்ளது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு மாணவர்களின் உயிரிழப்பின் அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு மாணவர் தற்கொலை செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் கடை உரிமையாளர் முருகேசன் என்பவரின் மகன் மோதிலால் (21) என்பவர்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

மோதிலால் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத உள்ளார். நாளை தேர்வு நடக்க உள்ள நிலையில், தேர்வு பயத்தில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வினால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து உள்ள சம்பவம் பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Yuvaraj V
First published: