நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறையா, ஒருமுறையா? : தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பு

நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறையா, ஒருமுறையா? : தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பு

கோப்புப்படம்

மருத்துவப்படிப்புக்கு இந்த ஆண்டு ஒருமுறை தான் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

 • Share this:
  மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

  ஜேஇஇ நுழைவுத் தேர்வை போல் நீட் தேர்வுக்கும் மாணவர்கள் அதிக வாய்ப்பு கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் மனஉளைச்சலை கருத்தில் கொண்டு மத்திய அரசு நடப்பு ஆண்டு முதல் நீட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

  மேலும் ஆன்லைனில் தேர்வை நடத்துவது என்றும் பரிந்துரைகள் முன்வைக்கப் பட்டிருந்தன. இதனை மருத்துவக்கல்வி அலுவலகம் ஏற்றுக்கொண்டிருக்கும் சூழலில், இந்த ஆண்டு இந்த பரிந்துரைகள் அமலுக்கு வரவில்லை. அதனால் வழக்கமான முறையிலேயே ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு நடத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், ஆன்லைனில் இல்லாமல் வழக்கமான காகித முறையில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய தேர்வுகள் முகமை நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க.... பொறியியல் படிப்பில் சேர கணிதம், இயற்பியல் கட்டாயமல்ல...  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: