நீட் தேர்வு எழுத வந்த புதுமணப்பெண்... தாலி, மெட்டியை கழற்ற சொன்ன அதிகாரிகள் - வீடியோ

நெல்லை மாவட்ட தேர்வு மையத்திற்கு வந்த முத்துலட்சுமி கழுத்தில் இருந்த தாலி மற்றும் காலில் அணிந்திருந்த மெட்டியை கழற்றிவிட்டு தேர்வு எழுத சென்றார்

  • News18 Tamil
  • Last Updated: September 13, 2020, 2:45 PM IST
  • Share this:
நீட் தேர்வு மையங்கள் அமைந்துள்ள வளாகங்களுக்குள் கடும் சோதனைக்கு பிறகு மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்வு நடக்க உள்ளது. காலை 11 மணி முதல் தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர்.

உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்ட பிறகு அனுமதி தரப்படுகிறது. தேர்வு மைய வளாகத்தில் மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. அடையாள அட்டை, ஹால் டிக்கெட், சானிடைசர், தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகிறது.


இந்நிலைியல் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மனைவி முத்துலட்சுமி நெல்லை மாவட்ட தேர்வு மையத்திற்கு வந்தபோது கழுத்தில் இருந்த தாலி மற்றும் காலில் அணிந்திருந்த மெட்டியை கழற்றிவிட்டு தேர்வு எழுத சென்றார். இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது

காதணி, சங்கிலி போன்றவற்றை கழற்றி மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தேர்வு மையத்திற்குள் சென்றனர். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கிட்டதட்ட 6 மணி நேரம் உள்ளே இருக்க வேண்டும் என்பதால், தேர்வு எழுதுவதற்கு முன்பாக பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது.திருச்சிக்கு நீட் தேர்வு எழுத சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த 63 மாணவ, மாணவியருக்கு, ஓயாத அலைகள் என்ற அமைப்பு வாகன ஏற்பாடு செய்துள்ளது. உணவு, முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களையும் அந்த அமைப்பினர் வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 409 மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
First published: September 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading