கிராமப் புறங்களில் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவேண்டும்- மாவட்ட ஆட்சியர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

மோடி

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி தற்போது மெல்லமாக குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் வரை இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2.63 லட்சமாக குறைந்தது. கொரோனா பாதிப்பு குறைவது நேர்மறையான அறிகுறியாக பார்க்கப்பட்டாலும் கிராமப் புறங்களிலும் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது என்ற செய்த அச்சம் தரக்கூடிய ஒன்றாக உள்ளது. போதிய மருத்துவக் கட்டமைப்பு இல்லாத கிராமப் புறங்களில் கொரோனா பரவும்போது அது பெரிய அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

  தலைநகர் புதுடெல்லியிலிருந்து ஒன்றரை மணி நேரப் பயணத்தில் இருக்கும் பாசி என்ற கிராமத்தில் 5,400 பேர் வசிக்கின்றனர், இதில் முக்கால்வாசிப் பேருக்குக் கொரோனா தொற்றியுள்ளது. கடந்த 3 வாரங்களில் 30 பேர் மரணமடைந்துள்ளனர்.

  கடந்த மே மாதம் 14ம் தேதியே பிரதமர் மோடி, “கொரோனா குறித்து உங்களை எச்சரிக்க விரும்புகிறேன், கிராமங்களில் தொற்று பரவி வருகிறது” என்று மாநில முதல்வர்கல் மாநாட்டில் தெரிவித்தார். இந்தநிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 9 மாநிலங்களைச் சேர்ந்த 46 மாவட்ட ஆட்சியர்களிடம் பிரதமர் மோடி காணொளி காட்சிவழியாக ஆலோசனை நடத்தினார்.

  அப்போது பேசிய அவர், ‘கொரோனா வைரஸூக்கு எதிரான நம்முடைய போராட்டத்தில் நம்முடைய முக்கிய ஆயுதங்களாக பகுதி வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், தீவிரமான கொரோனா சோதனை, சரியான மற்றும் முழுமையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் போன்றவைதான் உள்ளன. கொரோனா தடுப்பு மருந்து வழங்கலை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

  சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான முயற்களில் இருந்துவருகிறது. பி.எம் கேர் நிவாரண நிதியின் கீழ் நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை நிறுவும் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. கிராமப் புறங்களில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க திட்டங்களை வகுக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: