Home /News /tamil-nadu /

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்... கடும் மழை எச்சரிக்கை... பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்... கடும் மழை எச்சரிக்கை... பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

மழை

மழை

கடும் மழைக்காலத்தில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

    வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்துவருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் சூழல் ஏற்பட்டது. அதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் இன்னமும் தண்ணீர் வடியாத சூழல் உள்ளது. அதனால் பொதுமக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்தநேரத்தில் மழைக்காலத்தில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

    கடும் மழைக் காலத்தில் செய்யவேண்டியது என்ன?

    • காய்கறி, அத்தியாவசிய பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.

    • மெழுகுவர்த்தி, முதலுதவிப் பொருள்களை ஸ்டாக் வைக்கவும்

    • சாலையில் டிரான்ஸ்பார்மர் ஓரமாக நடந்து செல்வதைத் தவிர்க்கவும்

    • மழை பெய்யும்போது மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்கவும்

    • சாதாரண காய்ச்சலுக்கான மருந்தஉ வாங்கி வைத்துக் கொள்வது நல்லது

    • நீரில் மூழ்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்யக் கூடாது

    • இடி, மின்னலின்போது மின்சாதன பொருட்களை ஆஃப் செய்துவைக்கவும்

    • செல்போனை சார்ஜ் செய்தபடி பேசவோ, பயன்படுத்தவோ கூடாது.

    Published by:Karthick S
    First published:

    Tags: Chennai Rain

    அடுத்த செய்தி