சென்னையைச் சுற்றி நேற்று மட்டும் ₹ 33 கோடிக்கு மதுவிற்பனை

டாஸ்மாக்

சென்னையைச் சுற்றி உள்ள அருகாமை மாவட்ட டாஸ்மாக் கடைகளில், நேற்று மட்டும் 33 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.

 • Share this:
  சென்னை மாவட்டத்தில் ஏற்கெனவே மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. அருகாமை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளும் இன்று மூடப்பட்டன.

  4 மாவட்டங்களிலும் கடுமையான ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், அத்தியாவசிய தேவைகள் இன்றி இருசக்கர மற்றும் நான்கு வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

  இதனை கருத்தில்கொண்டு மதுகுடிப்போர் நேற்றே மதுபாட்டில்களை வாங்கி குவித்துவிட்டனர். வழக்கமாக திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை இருக்கும்.

  Also read... கையாடல் புகார்கள், கூடுதல் விலைக்கு மதுபானங்கள்... டாஸ்மாக் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் என்ன?

  ஆனால் நேற்று ஒரே நாளில் 5 மடங்கிற்கு மேல் 33 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. திருவள்ளூர் மேற்கு மண்டலத்தில் 12 கோடி ரூபாய்க்கும், காஞ்சிபுரம் வடக்கு மண்டலத்தில் 5 கோடி ரூபாய்க்கும், காஞ்சிபுரம் தெற்கு மண்டத்தில் 16 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்றுள்ளன.
  Published by:Vinothini Aandisamy
  First published: