மொபைலில் செய்தி பார்த்தால் பணம் என்று ரூ.100 கோடி மோசடி... தமிழகத்தில் மட்டும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஏமாற்றம்

மொபைலில் செய்தி பார்த்தால் பணம் என்று கூறி 100 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மொபைலில் செய்தி பார்த்தால் பணம் என்று ரூ.100 கோடி மோசடி... தமிழகத்தில் மட்டும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஏமாற்றம்
கோப்புப்படம்.
  • Share this:
மொபைல் செயலியில் செய்தி பார்த்தால் பணம் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய் மதிப்பில் மோசடி நடைபெற்றுள்ளதாக ஈரோடு மாவட்ட போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்த அபெக்ஸ் என்ற நிறுவனம் மொபைல் செயலியில் செய்தி பார்த்தால் பணம் தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர். இதன் மூலமாக சுமார் 100 கோடி ரூபாய் வரை முதலீடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

Also read: அதிமுக கொடி குறித்து எஸ்.வி.சேகர் விமர்சனம் - அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி


இந்த நிலையில், கடந்த மார்ச் முதல் செயலி செயலிழந்துவிட்டதால் பணம் வழங்கப்படவில்லை எனவும் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 5 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading