அரசியல் காரணங்களுக்காக இந்தியா பிளவுப்படுத்தப்படுகிறது: ராகுல்காந்தி

"இந்தியா எதிர்கொள்ளும் மிக பெரிய பிரச்சினை வேலையில்லா திண்டாட்டம்" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா பிளவுப்படுத்தப்படுகிறது: ராகுல்காந்தி
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: January 12, 2019, 9:01 AM IST
  • Share this:
அரசியல் காரணங்களுக்காக இந்தியா பிளவுபடுத்தப்பட்டு வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். துபாய் விமான நிலையத்தில் கூடி இருந்தவர்கள் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு இந்திய தொழிலதிபர்களை சந்தித்து பேசிய ராகுல், தொழிலாளர் முகாமுக்கு சென்று அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், அரசியல் காரணங்களுக்காக இந்தியா பிளவுபடுத்தப்படுவதாக கூறினார். ஒரு கொள்கைதான் சரியானது மற்றவை அனைத்தும் தவறானது என்று நம்பும் வரை இந்தியாவை ஒருபோதும் வழிநடத்த முடியாது என்றார். கடந்த நான்கரை ஆண்டு காலமாக இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்று வேதனை தெரிவித்த அவர், இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை வேலையில்லா திண்டாட்டம் என்றார்.


மேலும் வேலையில்லா திண்டாட்டத்தை மட்டும் அல்ல சீனாவையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்பதை உலக நாடுகளுக்கு காட்ட வேண்டும் என ராகுல் காந்தி கூறினார்.

Also see...பேட்ட படம் எனக்கும் மகிழ்ச்சி தான்: ரஜினி பராக்
First published: January 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்