Home /News /tamil-nadu /

சசிகலா புஷ்பாவிடம் பாஜக நிர்வாகி அத்துமீறலா? வைரல் வீடியோ குறித்து தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

சசிகலா புஷ்பாவிடம் பாஜக நிர்வாகி அத்துமீறலா? வைரல் வீடியோ குறித்து தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

வைரல் வீடியோ காட்சி

வைரல் வீடியோ காட்சி

sasikala pushpa viral video | சசிகலா புஷ்பாவிடம் பாஜக நிர்வாகி பொன் பாலகணபதி அத்துமீறியதாக வைரலான வீடியோ தேசிய அளவில் கவனம் ஈர்த்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இமானுவேல் சேகரின் 65-வது நினைவு தினம் கடந்த 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பலர்  மரியாதை செலுத்தினர்.

    தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, முன்னாள் எம்.பியும், மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா உள்ளிட்ட பலரும் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது சசிகலா புஷ்பாவிடம் பொன்.பாலகணபதி தவறான முறையில் நடந்து கொண்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் சசிகலா புஷ்பாவை அவர் உடல் ரீதியாக தொடுவதும், புடவை இழுப்பது போன்ற காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது போல் எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பொன்.பாலகணபதியை விமர்ச்சித்து பல கருத்துகளும் கண்டனங்களும் எழுந்தன.



    இதனிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த வீடியோவை தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு இருந்தனர். இதனால் இந்த விவகாரம் தேசிய அளிவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளோ பொன்.பாலகணபதி தவறாக ஏதும் நடந்து கொள்ளவில்லை சசிகலா புஷ்பாவிற்கு உதவி தான் செய்தார். திமுக கட்சியினர் இந்த வீடியோவை எடிட் செய்து சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த விவாகரம் தொடர்பாக பொன்.பாலகணபதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரும் 26-ம் தேதி காலை இந்த புகார் தொடர்பாக பால.கணபதி தன்னுடைய விளக்கத்தை அளிக்க வேண்டுமென்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: BJP, Congress, Sasikala Pushpa

    அடுத்த செய்தி