Home /News /tamil-nadu /

தாழ் உணர்ச்சிக்கு ஆட்படாமல் மாற்றுத்திறனாளிகள் முன்னேற வேண்டும்: மனுஷ்ய புத்திரன்

தாழ் உணர்ச்சிக்கு ஆட்படாமல் மாற்றுத்திறனாளிகள் முன்னேற வேண்டும்: மனுஷ்ய புத்திரன்

கவிஞர் மனுஷ்ய புத்திரன்

கவிஞர் மனுஷ்ய புத்திரன்

கிண்டியிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாட்டு சேவை மையத்தில் (NCSC-DA) தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கை மேற்பாட்டு சேவை மையத்தின் இணை இயக்குநர் (பொறுப்பு) சங்கீதா பற்குணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கவிஞர், எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

மேலும் படிக்கவும் ...
    மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் வங்கிக் கடன் பரிந்துரை முகாம் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் மனுஷ்ய புத்திரன், சமூகம் ஏற்படுத்தும் எந்த தாழ் உணர்ச்சிக்கும்  ஆட்படாமல் மாற்றுத்திறனாளிகள் முன்னேறி பயணிக்க வேண்டும் என்று கூறினார்.

    சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், சுயதொழில் மூலம் வாழ்க்கை மேம்பாடு அடைவதற்கு உதவியாக, “சுயதொழில் வங்கி கடன் பரிந்துரை முகாம்” கிண்டியிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாட்டு சேவை மையத்தில் (NCSC-DA)  இன்று நடைபெற்றது.

    இம்முகாமில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் ,சுய தொழில் செய்வதற்கு மானியத்துடன் ரூ.25,000 முதல் ரூ.ஒரு லட்சம் வரை வங்கிகளுக்கு பரிந்துரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடன் வழங்க பரிந்துரை, மாற்றுத் திறனாளிகள் ஆவின் பாலகம் அமைப்பதற்கு ரூ.50,000 மானியம் வழங்க பரிந்துரை, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்க ஆலோசனையும்  வழங்கப்பட்டது. 

    தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கை மேற்பாட்டு சேவை மையத்தின் இணை இயக்குநர் (பொறுப்பு) சங்கீதா பற்குணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கவிஞர், எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் 300க்கும் மேற்பட்ட பல்வேறு மாற்றுத்திறனாளிகள் நேரில் பங்கேற்றனர். அனைவரது விண்ணப்பங்களும் பூர்த்தி செய்து பெறப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: ஒரே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளுக்கு கண், கை, கால் செயல்திறன் பாதிப்பு.. தடுப்பூசியே காரணம் என புகார்!!


    இந்நிகழ்ச்சியில் பேசிய மனுஷ்யபுத்திரன், “ மத்திய, மாநில அரசுகளின் இது போன்ற சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் சலுகைகளை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சமூகத்தின் மைய நீரோட்டத்தில் மாற்றுதிறனாளிகள் வரவேண்டும். அதற்கான தொடக்கப் புள்ளியே இதுபோன்ற திட்டங்கள். இதுபோன்ற ஏராளமான திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும்.

    சமூகம் ஏற்படுத்தும் எந்த தாழ் உணர்ச்சிக்கும் ஆட்படாமல் மாற்றுத்திறனாளிகள் முன்னேறி பயணிக்க வேண்டும். நமது தேவைகளை அரசிடம் தெரிவித்து நமக்கான வாய்ப்பை நாம் உருவாக்க தவறிவிடக் கூடாது” என்று பேசினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Manushyaputhiran

    அடுத்த செய்தி