Home /News /tamil-nadu /

மருத்துவர்களின் அலட்சியம்.. அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த 6 வயது சிறுவன் - பெற்றோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு

மருத்துவர்களின் அலட்சியம்.. அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த 6 வயது சிறுவன் - பெற்றோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நீண்ட நேரம் உணவு உண்ணாததால் உடலில் சர்க்கரை குறைந்து மாரடைப்பு ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    மருத்துவர்களின் அலட்சியத்தை காரணம் காட்டி மாறுகண் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த 6 வயது சிறுவனின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்கக் கோரி தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்(NCDRC) உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் வசிக்கும் தம்பதி, கடந்த 2000 ஆண்டு ஜூன் மாதம் தங்களின் 6 வயது மகனுக்கு மாறு கண் பிரச்னைக்கு தீர்வு காண அங்குள்ள கண் மருத்துவமனையை அணுகியுள்ளனர். அப்போது, அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை பரிந்துரை செய்துள்ளது. இதை அடுத்து ஜூன் 14ஆம் தேதி அறுவை சிகிச்சைக்கான தேதி குறிக்கப்பட்டு, சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டான்.

    அறுவை சிகிச்சைக்கு முன்னர் சிறுவனின் இதய துடிப்பு மற்றும் உடல்களில் வேறுபாடுகளும் அதிர்வுகள் தென்பட்டுள்ளன. உடனடியாக அங்குள்ள இதய சிகிச்சை நிபுணரிடம் பரிசோதித்த போது அவர் சிறுவனுக்கு சிகிச்சை ஒன்றும் தேவையில்லை, மயக்க மருந்து வழங்கி அறுவை சிகிச்சையை தொடரலாம் எனத் தெரிவித்துள்ளார்.

    அறுவை சிகிச்சைக்கு முன்னதாக வெறும் வயிற்றுடன் காலை 9 மணிக்கெல்லாம் சிறுவன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால், அவனுக்கு அறுவை சிகிச்சையோ மதியம் 2 மணிக்கு தான் நடைபெற்றது. நீண்ட நேரம் உணவு உண்ணாததால் உடலில் சர்க்கரை குறைந்துள்ளது. தொடர்ந்து அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என பெற்றோர் குற்றஞ்சாட்டி தேசிய நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: லோன் ஆப் மோசடி - இயங்குவது எப்படி? - முழு ரிப்போர்ட்!

    இந்த வழக்கை விசாரித்த ஆர் கே அகர்வால் தலைமையிலான அமர்வு, பெற்றோரின் புகார்கள் சரியே, மருத்துவர்களின் அலட்சியமே சிறுவனின் உயிரிழப்புக்குக் காரணம் என உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Chennai, Compensation, Eye Problems, Hospital

    அடுத்த செய்தி