எந்த சின்னத்தை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு பதிவாகின்றது: வேட்பாளர் நவாஸ்கனி குற்றசாட்டு!

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுகவின் கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.

எந்த சின்னத்தை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு பதிவாகின்றது: வேட்பாளர் நவாஸ்கனி குற்றசாட்டு!
நவாஸ்கனி
  • News18
  • Last Updated: April 18, 2019, 4:17 PM IST
  • Share this:
வாக்கு எந்திரத்தில் எந்த சின்னத்தை தேர்வு செய்தாலும், தாமரைக்கு வாக்கு பதிவாவதாக ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ்கனி நியூஸ்18 தமிழ்நாடு செய்திக்கு பேட்டியளித்துள்ளார்.

இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகின்றது.

இந்நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக வின் கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் நவாஸ்கனி சாயல்குடியில் உள்ள வாக்கு சாவடியை பார்வையிட்டார்.


Also read... ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக இந்த தேர்தல் அமையும் - உதயநிதி ஸ்டாலின்

பின்னர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், சிக்கல் பகுதிகளில் உள்ள வாக்கு மையங்களில் எந்த சின்னத்தை தேர்வு செய்தாலும் அதில் தாமரை சின்னத்திற்கே வாக்கு பதிவதாக தெரிவித்தார்.

அதன் பின்  தொடர்ந்து அதிகாரிகளிடம் முறையிட்டு கேட்ட பின் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்ததாகவும் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.Also see...தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்