சென்னையிலிருந்து 3 நாள்களுக்கு முன் கடத்தப்பட்ட கடற்படை அதிகாரி: மஹாராஷ்டிராவில் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு

சென்னையிலிருந்து 3 நாள்களுக்கு முன் கடத்தப்பட்ட கடற்படை அதிகாரி: மஹாராஷ்டிராவில் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு

கொலை செய்யப்பட்ட நேவி அதிகாரி

சென்னையில் கடற்படை அதிகாரி கடத்தப்பட்டு மஹாராஷ்டிர காட்டுப்பகுதியில் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  ஜார்க்கண்ட் ராஞ்சி பகுதியை சேர்ந்த கடற்படை அதிகாரி சூரஜ் குமார் தூபே. கடந்த 3 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் மஹாராஷ்டிரா- குஜராத் எல்லை பகுதியில் எரிந்த நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் போலிசாருக்கு தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூரஜ் குமார், 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய மஹாராஷ்டிரா மாநில, பால்கர் மாவட்ட எஸ்.பி தத்ராத்ரே சிண்டே தெரிவிக்கையில், ‘கோவை ஐ.என்.எஸ் அக்ரனி (agrani)யில் பணிபுரிய ஜனவரி 30 தேதி வீட்டில் இருந்து கிளம்பியதாகவும், அதன் பின்னர் திடீரென செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனதால், எங்கு சென்றுள்ளார் என தெரியாமல் பெற்றோர்கள் ஜார்கண்ட் மாநில போலிசாரிடம் புகார் அளித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

  மேலும் விசாரணையில் ஜனவரி 31 ஆம் தேதி சென்னை விமான நிலையம் அருகே சூரஜ், 3 பேர் மூலம் துப்பக்கி முனையில் கடத்தப்பட்டு, சென்னையில் ஒரு பகுதியில் 3 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார். கடத்தல் கும்பல் 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டி பணம் தராததல், சென்னையிலிருந்து கார் மூலம் மஹாராஷ்டிரா- குஜராத் எல்லையில் காட்டுப்பகுதியில் வேவாஜி என்ற கிராமத்துக்கு கொண்டு சென்று, கடத்தல் கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து சென்னை போலிசார் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பணியாற்ற வந்த கடற்படை அதிகாரி சென்னையில் தூப்பக்கி முனையில் கடத்தப்பட்டு, பணத்திற்காக 3 நாட்கள் மிரட்டி வைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், கடத்தல் கும்பல் எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: