தொடங்கியது நவராத்திரி: முதல் நாள் என்ன செய்ய வேண்டும்?

news18
Updated: October 10, 2018, 10:33 AM IST
தொடங்கியது நவராத்திரி: முதல் நாள் என்ன செய்ய வேண்டும்?
news18
Updated: October 10, 2018, 10:33 AM IST
பெண் தெய்வங்களை கொண்டாடும் வகையில், இந்து மத விழாவான நவராத்திரி இன்று முதல் தொடங்குகிறது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.

வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூ வைத்து அம்மனை அலங்கரிப்பார்கள். 9 நாளும் 9 வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள். வடமாநிலங்களில் நவராத்திரி மிகவும் விசேஷமாக கொண்டாடுவது வழக்கம்.

அந்தவகையில் நவராத்திரியின் முதல் நாள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்!!

நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் புள்ளி கோலமிட வேண்டும். இன்று மிருதங்கம் வாசிக்கத் தெரிந்தவர்கள் தோடி ராகம் இசைப்பது மிகவும் சிறந்தது. சாமுண்டி அம்பாளுக்கு ஏற்ற மல்லிகை, வில்வம் மலர் சூட்டி வழிபட வேண்டும். முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும்.

நவராத்திரி முதல் நாள் அம்பிகைக்கு வெண்பெங்கல் நைவேத்தியம் செய்து கொலுவை பார்க்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம். இந்நாளில் அம்பிகையை வணங்கினால் எதிரிகள், கடன் தொல்லைகள் நீங்கும். ஆயுளும் செல்வமும் விருத்தி அடையும். பூஜை நேரம், காலை 10.30-12.00 மணி வரை மாலை - 6 மணி முதல் 7.30 மணிக்குள் வணங்க வேண்டும்.
First published: October 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...