• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நம்ம ஊருக்கு வாங்க... கமலா ஹாரிஸை அழைக்கும் அவரது பூர்வீக கிராம மக்கள்

நம்ம ஊருக்கு வாங்க... கமலா ஹாரிஸை அழைக்கும் அவரது பூர்வீக கிராம மக்கள்

கமலா ஹாரிஸை கொண்டாடும் பூர்வீக கிராம மக்கள்

கமலா ஹாரிஸை கொண்டாடும் பூர்வீக கிராம மக்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கு அவரது பூர்வீக கிராம மக்கள் தங்களது வாழத்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
அமெரிக்க துணை அதிபராக தகுதி பெற்றுள்ள கமலா ஹாரீஸ் தாய்வழி பூர்வீக கிராமம் திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம். அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் இந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா என்கிற அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் சிறப்பு அபிசேகம், பிரார்த்தனைகள் நடைபெற்றது.

தற்போது துணை அதிபராக தகுதி பெற்றதும் நன்றி செலுத்தும் வகையில் கிராம மக்கள் சிறப்பு பூசை செய்து வழிபட்டனர். குறிப்பாக தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் அருள்மொழி மற்றும்  கிராம மக்கள்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, திருவாரூர் எம்.எல்.ஏ, திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் அய்யனார் கோயிலில் வழிபட்டு, கிராம மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க...அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ்... கோலம் போட்டு வாழ்த்தும் பூர்வீக கிராம மக்கள்

துளசேந்திரபுரம் மட்டுமின்றி பைங்காநாடு, கண்ணாரப்பேட்டை  உள்ளிட்ட கிராமங்களில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மக்கள் கொண்டாடி வருகின்றனர். வீடுகளில் கோலமிட்டு கமலா ஹாரீசுக்கு வாழ்த்து சொல்லி வரைந்துள்ளனர்.



கமலா ஹாரீஸ் வெற்றியை தீபாவளியைப் போல் கொண்டாடி வருகிறோம் என்று கிராம மக்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். தங்கள் ஊருக்கு கமலா ஹாரீஸ் வருகை தர வேண்டும் என்றும் கிராம மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நம்ம ஊருக்கு வாங்க கமலா ஹாரிஸை அழைக்கும் அவரது பூர்வீக கிராம மக்கள்..


இது மட்டும் இன்றி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கமலா ஹரிஸின் வெற்றியை ,” இந்த வெற்றியின் மூலம் அவர் தமிழகத்தை பெருமைப்படுத்தி உள்ளதார்“ என்று தெரிவித்துள்ளார்.


திமுக தலைவர் ஸ்டாலின், இந்த வரலாற்றுத் தேர்தலில் தமிழ் பாரம்பரியம் கொண்ட ஒரு பெண்ணை அடுத்த துணைத் தலைவராக அமெரிக்க மக்கள் தேர்வு செய்ததில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: