• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • TET தேர்சிக்கான காலக்கெடு வாழ்நாள் முழுமைக்கானதாக மாற்றம் - தேசிய தொழில்நுட்ப கவுன்சில்

TET தேர்சிக்கான காலக்கெடு வாழ்நாள் முழுமைக்கானதாக மாற்றம் - தேசிய தொழில்நுட்ப கவுன்சில்

கோப்பு படம்

கோப்பு படம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற விதிகளில் தேசிய தொழில்நுட்ப கவுன்சில் மாற்றம் செய்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது நிரந்தரமாக செல்லத்தக்க வகையில் விதிகளில் தேசிய தொழில்நுட்ப கவுன்சில் மாற்றம் செய்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற விதி தற்போது நடைமுறையில் உள்ளது. ஏழாண்டு மட்டுமே சான்றிதழ் என்ற விதியால் தமிழகத்தில் மட்டும் 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற விதிகளில் தேசிய தொழில்நுட்ப கவுன்சில் மாற்றம் செய்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், TET தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் அதாவது ஓய்வுபெறும் வயது வரை செல்லும் என விதிகளில் திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Also read... மாசடைந்த முட்டுக்காடு நீர்நிலையை மறுசீரமைக்க குழு அமைத்த பசுமைத் தீர்ப்பாயம்



ஏற்கெனவே தேர்ச்சி பெற்றோர் தொடர்பாக சட்ட ரீதியாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ற வகையில், ஆசிரியர் பயிற்சியில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவது என்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: